Saturday, June 21, 2014

ஆமாம்... நான் ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு சனிக்கிழமை இரவு வெட்டியா இருக்கேன். இன்னைக்கு என் பள்ளி கால நண்பன் சங்கரின் பளாக்-ஐ இன்று திரும்பவும் படிக்க நேர்ந்தது. பல ஆண்டுகள் முன்னாடி போய்டேன்...எங்க வீட்டு மாடிப்படில நானும் அவனும் தமிழ் மற்றும் ஆங்கிலம் பத்தி நிறைய பேசினது இப்போ கூட பசுமரத்து ஆணி போல அப்படியே இருக்கு. நான் நிறைய காலம் அமைதியாக இருந்துட்டேன். எழுத வேண்டும் என்ற எண்ணம் பல வருடங்கலாக என் மனதில் துடித்துக்கொண்டேஇருந்துச்சு. இன்னைக்கு இல்லேன்னா இனிமே எழுதவே மாட்டேனு ஒரு எண்ணம் என்னை தாக்கிச்சு. அதனால இது ஒரு முயற்சின்னு சொல்லலாம்.

பிகு : நடைமுறை தமிழையும் சில ஆங்கில வார்த்தைகள் கலப்பையும் மன்னிக்கவும்! என் கவிதைகளில்(அட சரி என் கிறுக்கல்களில்) ஆங்கிலம் கலவாமல் முயற்சி செய்துள்ளேன்.  

இவன் 
வந்தியத்தேவன்